இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள்

தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும். இந்து சமயம் உருவான இடம் : தமிழ்நாடு இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் 1.சைவம் 2.சாக்தம் 3.வைஷ்ணவம் 4.கணாபத்யம் 5.கெளமாரம் 6.செளரம் 7.ஸ்மார்த்தம் சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்…. 276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!! வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்… 96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!! கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்…. 18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான் கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தான் உள்ளது..!! செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்…!! சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள்…. பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்…

Continue reading »

மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்

1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. 3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். 4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும். 5. பாண்டிய…

Continue reading »

ராவணன் vs அகத்தியர்

“இசையால் ஈசனையே மகிழ்வித்தமையால், தான் இசையில் சிறந்தவன், தன்னை மிஞ்சியவர் எவருமில்லை என்கிற அகந்தை கொண்டான் ராவணன். இதனை அறிந்த இறைவன், ராவணனின் எண்ணம் தவறென்று உணர்த்த, நாரதர் மூலம், திருவிளையாடல் புரிந்தார். இறைவன் ஆணைப்படி, இலங்கை சென்ற தேவரிஷி நாரதர், “ராவணா, வீணையில் கீதம்பாடி, வீணைக்கொடியோன் ஆனவனே, இசையில் உம்மை மிஞ்ச உலகில் எவருமில்லை என்கிறாய், ஆனால், அங்கே முனிவர் ஒருவரை இசையில் சிறந்தவராக பேசிக் கொள்கிறார்கள்…” “அப்படியா?” அதிகாரத்தோடு வினவினான் ராவணன்… “ஆம், கையிலையிலும், வைகுண்டத்திலும் கூட இது குறித்து நந்தியும், ஆதிஷேசனும் என்னிடம் வினவினர்” ஏற்றிவிட்டார் நாரதர். “யார் அந்த முனிவர்? ” “அகத்தியர்…” “அகத்தியர்…?” பேரை கேட்டதும் சற்று மிடறுவிழுங்கினான் ராவணன், ஏனெனில், மூவரும், தேவரும் போற்றும் மகரிஷி, மகாதேவர் சிவனாரின் பேரன்பை பெற்றவர்…

Continue reading »